1 நாளாகமம் 12:15யோர்தானைக் கடந்தவர்
யோர்தான் கரைபுரண்டுபோயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.
1 Chronicles 12:15
யோர்தானைக் கடந்தவர்
யோர்தான் ஆறு கரைபுரண்டு ஓடும் முதலாம் மாதத்தில், இந்தத் தீரமான காத் வீரர்கள் அதைக் கடந்து சென்று பள்ளத்தாக்கு வாசிகளைத் துரத்தினார்கள். வெள்ளம் நிறைந்த ஆற்றைக் கடப்பதே அசாத்தியமான காரியம், அதற்குள் யுத்தமும் செய்தார்கள். இது இவர்களுடைய வெளிப்படையான தீரத்தையும் திறமையையும் காட்டுகிறது. மனிதனுக்கு அசாத்தியமெனத் தோன்றும் காரியங்களைக் கடந்து செல்பவர்களே உண்மையான வீரர்கள்.
