1 நாளாகமம் 15:1பெட்டிக்கான இடம்
அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப்போட்டான்.
1 Chronicles 15:1
பெட்டிக்கான இடம்
தாவீது தன் அரண்மனையைக் கட்டியபின், முதலில் செய்தது என்ன தெரியுமா? தேவனுடைய பெட்டிக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கொரு கூடாரம் அமைத்தார். ஏற்கெனவே பேரேஸ் ஊசாவின் சம்பவத்தில் கஷ்டப்பட்ட தாவீது, இந்த முறை அவசரப்படாமல் முதலில் ஏற்பாடு செய்தார். தன் வீட்டைவிட தேவனுடைய இருப்பிடத்தை முதன்மைப்படுத்திய இந்த மனநிலையே அவருடைய பக்தியின் அடையாளம்.
