1 நாளாகமம் 23:1முடியை மகனுக்கு தந்தார்
தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.
1 Chronicles 23:1
முடியை மகனுக்கு தந்தார்
தாவீது ராஜா வயதானார். வெள்ளை நிறைந்த தலை, தளர்ந்த கைகள். ஆனாலும் இஸ்ரவேலின் எதிர்காலத்தை நினைத்து, தன் மகன் சாலொமோனை ராஜாவாக முடிசூட்டி வைத்தார். ஒரு தலமுறை முடியும்போது, அடுத்த தலமுறையை ஆயத்தப்படுத்தி வைப்பதே ஞானமுள்ள தலைவனின் அடையாளம். தன் வாழ்நாளின் கடைசி நேரத்தையும் தேவனுடைய திட்டத்திற்காக பயன்படுத்தினார்.
