1 நாளாகமம் 23:30காலையும் மாலையும் துதி
நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வுநாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும்,
1 Chronicles 23:30
காலையும் மாலையும் துதி
நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரை போற்றி துதிக்கும் பணி லேவியருக்கு ஒப்படைக்கப்பட்டது. சூரியன் உதிக்கும் நேரமும் மறையும் நேரமும் தேவனுடைய துதியால் நிறைந்திருந்தது. ஒரு நாளின் ஆரம்பமும் முடிவும் தேவனை நோக்கி திரும்புவது எவ்வளவு அழகான வழக்கம்.
