1 கொரிந்தியர் 11:2பாராட்டும் ஆசிரியர்
சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன்.
1 Corinthians 11:2
பாராட்டும் ஆசிரியர்
கொரிந்து சபை பலவீனங்கள் நிறைந்த சபையாக இருந்தாலும், பவுல் அவர்களை நேரடியாகக் குறை சொல்லும் முன் நல்லதை முதலில் பாராட்டுகிறார். தான் கற்றுக்கொடுத்த போதனைகளை அவர்கள் கைக்கொண்டு வந்ததற்கு நன்றி சொல்கிறார். திருத்த வேண்டியவற்றை சொல்லும் முன் நல்லதைப் பார்க்கும் இந்த மனது எத்தனை அழகானது. நமக்கும் மற்றவரைத் திருத்தும் முன் அவரிடம் உள்ள நல்லதைப் பாராட்டத் தெரிந்திருக்கவேண்டும்.
