1 கொரிந்தியர் 2:4ஆவியின் பெலன்
உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,
1 Corinthians 2:4
ஆவியின் பெலன்
பவுலின் பேச்சும் பிரசங்கமும் நயவசன அலங்காரம் இல்லாமல் இருந்தது, ஆனால் ஆவியின் பெலத்தால் நிறைந்திருந்தது. இதனால் தான் கொரிந்தியரின் விசுவாசம் மனிதனுடைய பேச்சுத் திறமையின் மேல் நிற்காமல், தேவனுடைய பெலத்தின் மேல் நிலைத்தது. ஒருவரின் வார்த்தைத் திறமையை நம்பி விசுவாசிப்பவர், அந்த ஆளின் மறைவோடு விசுவாசத்தையும் இழந்துவிடக்கூடும். ஆனால் தேவனுடைய பெலத்தில் நிற்கும் விசுவாசம் என்றும் நிலைத்திருக்கும்.
