1 கொரிந்தியர் 2:8அறியாத பிரபுக்கள்
அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.
1 Corinthians 2:8
அறியாத பிரபுக்கள்
இந்த உலகத்தின் ஆளுநர்களும் அதிகாரிகளும் இந்த தேவ ஞானத்தை அறியவில்லை என்று பவுல் சொல்கிறார். அவர்கள் அதை அறிந்திருந்தால், மகிமையின் கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் அறையமாட்டார்கள். பொந்தியு பிலாத்துவும், யூத தலைவர்களும் தங்கள் அறியாமையில் தான் அந்த மிகப்பெரிய தவறை செய்தார்கள். அறியாமையால் செய்யப்பட்ட அந்த செயலே, தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றியது என்பது எத்தனை ஆச்சரியம்.
