1 கொரிந்தியர் 8:1அறிவும் அன்பும்
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
1 Corinthians 8:1
அறிவும் அன்பும்
கொரிந்து பட்டணத்தில் விக்கிரகங்களுக்குப் படைத்த இறைச்சி சந்தையில் விற்கப்பட்டது. அதை சாப்பிடலாமா என்று சபையில் பெரிய குழப்பம் இருந்தது. பவுல் சொல்கிறார், நமக்கெல்லாம் இது தவறில்லை என்ற அறிவு உண்டு தான், ஆனால் அந்த அறிவு மட்டும் இருந்தால் நாம் பெருமைப்பட்டுவிடுவோம். அன்போ மற்றவரை கட்டி வளர்க்கும். அறிவு தலையை நிமிர்த்தும், அன்பு இருதயத்தை நிமிர்த்தும் என்று சொல்லலாம்.
