1 இராஜாக்கள் 16:23உம்ரியின் அரசாட்சி தொடக்கம்
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அவன் திர்சாவிலே ஆறுவருஷம் அரசாண்டு,
1 Kings 16:23
உம்ரியின் அரசாட்சி தொடக்கம்
ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில் உம்ரி இஸ்ரவேலின் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ஆண்டார்; அதில் ஆறு வருஷம் திர்சாவில் இருந்தார். இத்தனை உட்பூசல்களையும் வென்று அரியணை உறுதியாக்கிக்கொண்டவர் என்றாலும், அவருடைய ஆவிக்குரிய நிலை என்ன என்பதை அடுத்த வசனங்களில் பார்ப்போம். வெளி அதிகாரம் நிலைத்தாலும், இருதயத்தின் நிலைமையே கர்த்தருடைய பார்வையில் முக்கியம்.
