1 இராஜாக்கள் 17:21மூன்று தரம் குப்புற விழுதல்
அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.
1 Kings 17:21
மூன்று தரம் குப்புற விழுதல்
பிள்ளையின் மேல் மூன்று தரம் விழுந்து, ஆத்துமா திரும்பி வர வேண்டும் என்று விண்ணப்பிக்கும் எலியாவின் தீவிரம் நமக்குத் தெரிகிறது. ஒரு முறை ஜெபித்து விட்டு விடவில்லை, தொடர்ந்து, தீவிரமாக, ஆத்மார்த்தமாக மன்றாடினார். தேவனுக்கு முன் நிலைத்திருக்கும் ஜெபம் இது.
