1 இராஜாக்கள் 6:38ஏழு வருஷ உழைப்பு
பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது; அவன் அதைக் கட்டிமுடிக்க ஏழுவருஷம் சென்றது.
1 Kings 6:38
ஏழு வருஷ உழைப்பு
பதினோராம் வருஷம் எட்டாம் மாதத்தில் ஆலயம் சகல சட்டதிட்டங்களின்படியும் ஒரு பங்கும் குறையாமல் கட்டி முடிக்கப்பட்டது - ஏழு வருஷங்கள் இதற்கு ஆனது. ஏழு வருஷங்கள் நேரமும் பொருளும் திறமையும் செலவழிக்கப்பட்டது, தேவனுடைய வீட்டில் அவசரப்பட்டு எதுவும் செய்யப்படவில்லை. நல்ல காரியங்களுக்கு நேரம் எடுத்துக்கொள்வது தவறல்ல என்பதை இந்த ஏழு வருஷங்கள் நமக்குக் கற்பிக்கின்றன.
