1 இராஜாக்கள் 8:43பூமியெல்லாம் அறிய
உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.
1 Kings 8:43
பூமியெல்லாம் அறிய
அந்நியன் வந்து வேண்டிக்கொள்ளும்போது, பரலோகத்திலிருக்கிற தேவன் அதைக் கேட்க வேண்டும் என்று சாலொமோன் வேண்டிக்கொண்டார். ஏன்? பூமியின் ஜனங்களெல்லாரும் இஸ்ரவேலைப் போலவே கர்த்தருக்குப் பயப்படும்படிக்கு. இந்த ஆலயத்தில் தேவனுடைய நாமம் தரித்திருக்கிறது என்பது வெளியே தெரிய வேண்டும் என்ற எண்ணம் இதில் இருந்தது. தேவனை மகிமைப்படுத்துவதே அரசரின் ஆழ்ந்த விருப்பமாக இருந்தது.
