1 பேதுரு 1:12தேவதூதரும் ஆசைப்படும் ரகசியம்
தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது, பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.
1 Peter 1:12
தேவதூதரும் ஆசைப்படும் ரகசியம்
தீர்க்கதரிசிகள் தங்களுக்காக அல்ல, நமக்காகவே இந்த ரகசியங்களை அறிவித்தார்கள் என்பது அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது. இப்போது பரிசுத்த ஆவியானவரின் மூலமாக அதே சுவிசேஷம் நமக்கு பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது. இதை உற்றுப்பார்க்க தேவதூதர்களே ஆசைப்படுகிறார்கள் என்று பேதுரு சொல்வது எத்தனை ஆச்சரியம். மனுஷனாகிய நமக்குக் கிடைத்த இந்த சுவிசேஷம் பரலோகத்திலும் மகிமைக்குரிய செய்தி.
