1 சாமுவேல் 17:45சேனைகளின் கர்த்தர்
அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.
1 Samuel 17:45
சேனைகளின் கர்த்தர்
பட்டயம், ஈட்டி, கேடகம் இவை கோலியாத்தின் நம்பிக்கை; 'சேனைகளுடைய கர்த்தரின் நாமம்' தாவீதின் நம்பிக்கை. ஆயுதங்களை எண்ணிப் பார்த்தால் தாவீது எதுவுமில்லாதவர்தான், ஆனால் அவர் கொண்டு வருவது ஆயுதம் அல்ல, இஸ்ரவேலின் தேவனுடைய நாமம். இந்த ஒரு வார்த்தையிலேயே இந்த யுத்தத்தின் முடிவு தீர்மானமாகி விடுகிறது. நம் பலவீனங்களை எண்ணிப் பயப்படும் நேரங்களில், நாம் யாருடைய நாமத்தில் நிற்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கலாம்.
