1 சாமுவேல் 17:48தீவிரமாய் ஓடினார்
அப்பொழுது அந்தப் பெலிஸ்தன் எழும்பி, தாவீதுக்கு எதிராகக் கிட்டிவருகையில், தாவீது தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி,
1 Samuel 17:48
தீவிரமாய் ஓடினார்
கோலியாத் நெருங்கி வரும்போது தாவீது பயந்து பின்வாங்கவில்லை, தீவிரமாய் அவனை நோக்கி ஓடினார். இது பயமின்மை மட்டுமல்ல, தேவனுடைய வாக்கை நிச்சயமாக நம்பியதன் வெளிப்பாடு. நிதானமாய் நடந்திருந்தால் கூட வெற்றி வந்திருக்கும், ஆனால் இந்த ஓட்டம் தாவீதின் இருதயத்தில் இருந்த உறுதியைக் காட்டுகிறது. நமக்கு முன் நிற்கும் பெரிய பிரச்சனைகளையும் இப்படியே நேருக்கு நேர் எதிர்கொள்ளும் மனதை தேவன் தந்தால் நல்லது.
