1 சாமுவேல் 21:1நடுங்கும் ஆசாரியன்
தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடத்தில் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடே கூடவராமல், நீர் ஒண்டியாய் வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான்.
1 Samuel 21:1
நடுங்கும் ஆசாரியன்
தாவீது சவுலிடமிருந்து ஓடி ஓடி நோபு ஊருக்கு வந்தார். தன்னந்தனியாக, ஆயுதமும் இல்லாமல் வந்த தாவீதைப் பார்த்த அகிமெலேக்கு நடுங்கிப் போனார். ராஜாவின் அருகில் இருந்தவர் தனியாக, பயந்த தோற்றத்துடன் வருவது சாதாரணமாக இல்லை என்று ஆசாரியன் உணர்ந்தார். ஆபத்தில் இருக்கும்போது நமக்கும் அருகில் இருப்பவர்கள் நம் முகத்தைப் பார்த்தே நம் நிலையை உணர்ந்துவிடுவார்கள்.
