1 சாமுவேல் 4:6எபிரெயரின் சத்தம்
அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர் கேட்டபோது: எபிரெயருடைய பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள்.
1 Samuel 4:6
எபிரெயரின் சத்தம்
பெலிஸ்தர் இந்த பெரும் சத்தத்தைக் கேட்டு பயந்துபோனார்கள். எபிரெயருடைய பாளயத்தில் இப்படி ஒரு ஆர்ப்பரிப்பு என்ன என்று ஆச்சரியப்பட்டார்கள். இவர்கள் இஸ்ரவேலரின் தேவனைப் பற்றிய கதைகளை முன்பே கேட்டிருந்தார்கள் போலும். எதிரிகள் கூட தேவனுடைய வல்லமையை அறிந்திருந்தார்கள், ஆனால் இஸ்ரவேலர் அந்த வல்லமையை மறந்திருந்தார்கள்.
