1 சாமுவேல் 5:8காத் பட்டணத்திற்கு
பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் அழைப்பித்து, தங்களண்டையிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத் பட்டணமட்டும் எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக் கொண்டுபோனார்கள்.
1 Samuel 5:8
காத் பட்டணத்திற்கு
பயந்துபோன அஸ்தோத் ஊரார் பெலிஸ்தரின் ஐந்து பட்டணங்களின் அதிபதிகளையும் கூட்டி ஆலோசனை கேட்டார்கள். அதிபதிகள் பெட்டியை காத் பட்டணத்திற்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தார்கள். தங்கள் பிரச்சினையை மற்றொருவரிடம் தள்ளிவிட நினைத்தார்கள். ஆனால் கர்த்தருடைய கையிலிருந்து ஓடிப்போக பெலிஸ்தரின் எந்த பட்டணமும் தப்ப முடியாது.
