1 தெசலோனிக்கேயர் 2:1வீணாகாத வருகை
சகோதரரே, நாங்கள் உங்களிடத்தில் பிரவேசித்தது வீணாயிருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள்.
1 Thessalonians 2:1
வீணாகாத வருகை
பவுல் தெசலோனிக்கே சபையாருக்கு எழுதும்போது, அவர் அங்கு போய் செய்த ஊழியம் பயனற்றுப் போகவில்லை என்பதை நினைவூட்டுகிறார். அவர்கள் கண்ணால் கண்டது, காதால் கேட்டது எல்லாம் மெய்யான வார்த்தையாக விளைந்தது. வெறும் பேச்சு அல்ல, அவர்கள் வாழ்க்கையிலே மாற்றம் வந்தது. அதனால்தான் இதை நேரடியாக 'நீங்களே அறிந்திருக்கிறீர்கள்' என்று சொல்ல முடிந்தது. நமது வாழ்விலும் கர்த்தர் செய்த வேலை வெளிப்படையாகத் தெரிய வேண்டும்.
