2 நாளாகமம் 12:9பொக்கிஷங்கள் கொள்ளையானது
அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகளாகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டுபோய்விட்டான்.
2 Chronicles 12:9
பொக்கிஷங்கள் கொள்ளையானது
சீஷாக் எருசலேமுக்கு வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான். சாலொமோனின் காலத்து மகிமை ஒரு தலைமுறையில் இப்படிக் கொள்ளையாய் போனதைப் பார்க்கும்போது மனது கனக்கிறது. கர்த்தரை விட்டுவிட்டதற்கான விலை எவ்வளவு பெரியது என்பதை இந்த ஒரு நாள் நமக்குக் காட்டுகிறது.
