2 நாளாகமம் 15:11கொள்ளையிலிருந்து பலி
தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டுவந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்குப் பலியிட்டு,
2 Chronicles 15:11
கொள்ளையிலிருந்து பலி
போரில் கொள்ளையிட்டு கொண்டுவந்த எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் அன்று கர்த்தருக்குப் பலியிட்டார்கள். தேவன் கொடுத்த வெற்றியின் பலனை மறுபடியும் தேவனுக்கே திருப்பிக் கொடுத்தார்கள். எல்லாம் அவரிடத்திலிருந்தே வந்தது என்று அறிந்து அதை நன்றியோடு திருப்பிக் கொடுக்கும் ஒரு அழகான மனசாட்சி இதில் தெரிகிறது.
