2 நாளாகமம் 18:6யோசபாத்தின் நல்ல உள்ளுணர்வு
பின்பு யோசபாத் நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.
2 Chronicles 18:6
யோசபாத்தின் நல்ல உள்ளுணர்வு
அத்தனை தீர்க்கதரிசிகள் ஒத்த வார்த்தை சொன்னாலும், யோசபாத்துக்கு ஏதோ சரியில்லை என்ற தோன்றியிருக்க வேண்டும். அதனால் ‘கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா’ என்று கேட்டார். இது ஒரு விவேகமான கேள்வி - எண்ணிக்கையை நம்பாமல் உண்மையைத் தேடும் மனது. தேவன் தம் பிள்ளைகளுக்குள் இப்படி ஒரு உள்ளுணர்வை வைத்திருக்கிறார், அதைக் கேட்டு நடக்க வேண்டும்.
