2 நாளாகமம் 20:1பகைவர் மூவர் கூட்டணி
இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்.
2 Chronicles 20:1
பகைவர் மூவர் கூட்டணி
யோசபாத் அரசாண்ட யூதாவுக்கு விரோதமாய் மோவாபியரும், அம்மோனியரும், இன்னும் வேறு தேசத்தாரும் ஒன்றுசேர்ந்து யுத்தத்திற்கு வந்தார்கள். ஒரு ராஜாவுக்கு இது எவ்வளவு பயமுறுத்தும் செய்தி என்று நினைத்துப் பாருங்கள். மூன்று பக்கத்திலிருந்தும் பகைவர் வருகிறார்கள் என்றால், அது சாதாரண போராட்டமல்ல. இந்தச் சூழ்நிலையிலேயே யோசபாத்தின் விசுவாசம் வெளிச்சத்திற்கு வருகிறது.
