2 நாளாகமம் 20:32தகப்பன் வழியில்
அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழியிலே நடந்து, அதைவிட்டு விலகாதிருந்து, கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
2 Chronicles 20:32
தகப்பன் வழியில்
யோசபாத் தன் தகப்பனாகிய ஆசாவின் வழியிலே நடந்து, அதைவிட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தார். ஆசா ராஜாவும் நல்ல ராஜாவாக இருந்தார், அந்த நல் மரபு தன் மகனிலும் தொடர்ந்தது. நல்ல வாழ்க்கை என்பது ஒரு தலைமுறையிலிருந்து மறு தலைமுறைக்கு தொடர்ச்சியாக செல்லக்கூடியது என்பதை இது காட்டுகிறது. குடும்பத்தில் விசுவாசத்தின் மரபு தொடர்வது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்.
