2 நாளாகமம் 31:14உற்சாகக் காணிக்கை பாகிடல்
கிழக்கு வாசலைக் காக்கிற இம்னாவின் குமாரனாகிய கோரே என்னும் லேவியன், கர்த்தருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிடும்படிக்கு, தேவனுக்குச் செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தான்.
2 Chronicles 31:14
உற்சாகக் காணிக்கை பாகிடல்
கிழக்கு வாசலைக் காக்கிற கோரே என்னும் லேவியன், தேவனுக்குச் செலுத்தப்பட்ட உற்சாகக் காணிக்கைகள் மற்றும் மகா பரிசுத்தமானவைகளை பங்கிடும் பொறுப்பு பெற்றார். சிறிய காவல் வேலையிலிருந்து முக்கிய பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். உண்மையுடன் காவல் காத்தவருக்கு பெரிய பொறுப்பு அளிக்கப்பட்டது என்பது வேறு பாடம். சிறிய காரியத்தில் உண்மையாய் இருப்பவரே பெரிய காரியத்திற்கும் தகுதி பெறுவார்.
