2 நாளாகமம் 32:20ஜெபமும் தீர்க்கதரிசியும்
இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தைநோக்கி அபயமிட்டார்கள்.
2 Chronicles 32:20
ஜெபமும் தீர்க்கதரிசியும்
இவ்வளவு நிந்தையையும் பயமுறுத்தலையும் கேட்டபோது, எசேக்கியாவும் ஏசாயா தீர்க்கதரிசியும் என்ன செய்தார்கள் தெரியுமா? ஆயுதம் எடுக்கவில்லை, திரும்ப வார்த்தையால் பதிலடி கொடுக்கவும் இல்லை. வானத்தை நோக்கி அபயமிட்டு ஜெபித்தார்கள். ஆபத்து பெரிதாகும்போது, தேவனிடம் திரும்புவதே சரியான வழி என்பதை இந்த ராஜாவும் தீர்க்கதரிசியும் நமக்குக் காட்டுகிறார்கள்.
