2 நாளாகமம் 32:7நம்மோடிருக்கிறவர் அதிகம்
நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.
2 Chronicles 32:7
நம்மோடிருக்கிறவர் அதிகம்
அசீரியாவின் பெரிய படையைப் பார்த்து பயப்படவேண்டாம் என்று எசேக்கியா ஜனங்களுக்குச் சொன்னார். 'அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்' என்ற வார்த்தை எத்தனை பெலன் நிறைந்தது. கண்ணுக்குத் தெரியும் சேனையைவிட, கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய பெலன் அதிகம் என்பதே இதன் அர்த்தம். இன்று நம்மைச் சூழ்ந்திருக்கும் பெரிய பிரச்சனைகளுக்கு நடுவிலும் இந்த வார்த்தை நமக்கு தைரியம் தரும்.
