2 நாளாகமம் 34:21கர்த்தரிடம் விசாரிப்பு
கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதேபோனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.
2 Chronicles 34:21
கர்த்தரிடம் விசாரிப்பு
'நம் பிதாக்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாதே போனபடியினால் நம்மேல் மூண்ட உக்கிரம் பெரியது' என்று யோசியா அறிக்கை செய்தார். தன் மேலும் ஜனத்தின் மேலும் இருக்கும் ஆபத்தை உணர்ந்து, தேவனிடம் விசாரிக்கச் சொல்கிறார். தான் தவறு செய்யாதிருந்தும், முன்னோர்களின் தவறின் விளைவை புரிந்துகொண்டு தாழ்மையாக நடந்துகொள்கிறார். தேவனுடைய வார்த்தையை புறக்கணித்ததின் விளைவை உணரும்போது, அதை மறுபடியும் கேட்டு அறியும் மனது எத்தனை பெரியது.
