2 நாளாகமம் 6:25தேசத்திற்குத் திரும்புதல்
பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக.
2 Chronicles 6:25
தேசத்திற்குத் திரும்புதல்
பாவத்தை மன்னித்து, தேசத்திற்கு மக்களைத் திரும்பவைக்க வேண்டுமென்று சாலொமோன் கேட்கிறார். இது பிற்காலத்தில் பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பிய இஸ்ரவேலருக்கு எவ்வளவு பொருத்தமான ஜெபமாய் ஆனது என்று நினைத்துப் பாருங்கள். இந்த ஜெபமே பின்னால் அவர்களது நம்பிக்கையின் அஸ்திவாரமாய் இருந்திருக்கும்.
