2 கொரிந்தியர் 4:13விசுவாசித்தேன், பேசினேன்
விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறடியால் பேசுகிறோம்.
2 Corinthians 4:13
விசுவாசித்தேன், பேசினேன்
பவுல் 'விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன்' என்ற பழைய பாட்டின் வரியை மேற்கோள் காட்டுகிறார். அதே விசுவாசத்தின் ஆவி தன்னிலும் இருப்பதால், அவரும் தன் இருதயத்தில் நம்பியதைத் தைரியமாய் பேசுகிறார். விசுவாசம் மௌனமாய் இருக்காது, அது வெளிப்படும். நமக்கும் உள்ளத்தில் விசுவாசம் இருந்தால், அது நம் வார்த்தைகளில் வெளிப்பட்டே தீரும்.
