2 கொரிந்தியர் 5:18ஒப்புரவாக்குதலின் ஊழியம்
இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
2 Corinthians 5:18
ஒப்புரவாக்குதலின் ஊழியம்
இந்த புது சிருஷ்டியை உண்டாக்குவது தேவன் ஒருவரே என்று பவுல் தெளிவுபடுத்துகிறார். இயேசுகிறிஸ்துவின் மூலமாக நம்மை தமக்கு ஒப்புரவாக்கியவர் அவர்தான். அந்த ஒப்புரவாக்குதலின் ஊழியத்தையும் நமக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். நாம் தேவனோடு சேர்க்கப்பட்டவர்களாக, மற்றவரையும் அந்த சேர்க்கைக்கு அழைக்க பொருப்பாளர்களானோம் என்பதே இதன் அர்த்தம்.
