2 கொரிந்தியர் 8:12மனது இருந்தால் போதும்
ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.
2 Corinthians 8:12
மனது இருந்தால் போதும்
தேவன் நமது அளவைப் பார்த்து மதிப்பிடுவதில்லை, மனதைப் பார்த்தே மதிப்பிடுகிறார் என்று பவுல் ஆறுதலாக சொல்கிறார். இல்லாததைக் கொடுக்க முடியாது என்பதால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. உள்ளதைக் கொண்டு மனதார கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்பது எத்தனை ஆறுதல் தரும் வார்த்தை.
