2 இராஜாக்கள் 18:25கர்த்தரின் பெயரை பயன்படுத்தி
இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்.
2 Kings 18:25
கர்த்தரின் பெயரை பயன்படுத்தி
தான் இந்த இடத்தை அழிக்க கர்த்தரின் கட்டளையின்படியே வந்திருப்பதாக ரப்சாக்கே பொய் சொன்னார். எசேக்கியாவின் மக்களை மனத்தளர்ச்சிக்கு உள்ளாக்க அவர் தேவனுடைய பெயரையே தந்திரமாக பயன்படுத்தினார். எதிரிகள் சில நேரங்களில் தேவனுடைய வார்த்தைகளை கூட தங்கள் தர்க்கத்திற்கு திருடும் அளவு தாழ்வார்கள் - இதை அறிந்திருந்தால் நாம் ஏமாறாமல் இருக்கலாம்.
