2 இராஜாக்கள் 5:2சிறு பெண்ணின் ஞாபகம்
சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண்ணைச் சிறைபிட்டித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
2 Kings 5:2
சிறு பெண்ணின் ஞாபகம்
போரில் சிறைபிடிக்கப்பட்டு, தன் தாய்நாட்டை விட்டு அந்நிய வீட்டில் பணிவிடை செய்யும் ஒரு சிறு பெண். பெயர் தெரியாத, மதிக்கப்படாத ஒரு அடிமைப் பெண். ஆனாலும் அவள் இதயத்தில் தன் தேசத்தின் தேவனையும், அவருடைய தீர்க்கதரிசியையும் மறக்கவில்லை. இந்தச் சிறு பெண்ணின் மூலமே பெரிய அற்புதம் ஆரம்பிக்கப் போகிறது.
