2 இராஜாக்கள் 6:15என்ன செய்வோம்
தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.
2 Kings 6:15
என்ன செய்வோம்
எலிசாவின் வேலைக்காரன் அதிகாலையில் எழுந்து வெளியே வந்தபோது, பட்டணத்தைச் சுற்றி நிறைந்திருந்த ராணுவத்தையும் குதிரைகளையும் கண்டு பயந்துபோனான். 'ஐயோ என் ஆண்டவனே, என்ன செய்வோம்' என்று கூவினான். கண் காணும் அபாயத்தை மட்டும் பார்த்தால் யார்தான் பயப்படாமல் இருக்க முடியும். மனுஷ கண்ணுக்குத் தெரியாத உண்மை இன்னும் வெளிப்படவில்லை.
