2 இராஜாக்கள் 6:7கையை நீட்டு
அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.
2 Kings 6:7
கையை நீட்டு
இரும்பு தண்ணீர் மேல் மிதந்தபோது எலிசா அதை எடுத்துக்கொள் என்று சொன்னார். அந்த சீஷன் தன் கையை நீட்டி எடுத்துக்கொண்டான். அற்புதம் நடந்தபின்னும் அவனே கை நீட்டி எடுக்க வேண்டியிருந்தது. தேவன் அற்புதம் செய்தாலும், நம் பங்கை நாமே செய்ய வேண்டும் என்பதை இது நினைவூட்டுகிறது.
