2 இராஜாக்கள் 7:8முதலில் தமக்கே
அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு போய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டு போய் ஒளித்து வைத்து,
2 Kings 7:8
முதலில் தமக்கே
பாளையத்தை அடைந்த குஷ்டரோகிகள் நான்கு பேரும் முதலில் ஒரு கூடாரத்திற்குள் நுழைந்து சாப்பிட்டு குடித்து, வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்து ஒளித்து வைத்தார்கள். பசியோடு, வெறுமையோடு வாழ்ந்த அவர்கள் முதலில் தமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வது இயல்பாகவே இருந்தது. ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்திற்குச் சென்று, மீண்டும் மீண்டும் அதே செய்கையை செய்தார்கள். இப்போது அவர்களே எவ்வளவு பணக்காரர்கள் ஆயிருக்கிறார்கள் என்று அவர்களே உணரவில்லை. ஆனால் இந்த செல்வம் அவர்கள் ஒருவருக்காக மட்டும் இல்லை என்பது இன்னும் அவர்கள் மனதில் விடிய வேண்டியிருந்தது.
