2 இராஜாக்கள் 8:2பெலிஸ்தர் தேசத்தில்
அந்த ஸ்திரீ எழுந்து, தேவனுடைய மனுஷன் சொன்ன வார்த்தையின்படி செய்து, தன் வீட்டாரோடுங்கூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்தில் போய், ஏழுவருஷம் சஞ்சரித்தாள்.
2 Kings 8:2
பெலிஸ்தர் தேசத்தில்
இந்தத் தாய் எலிசாவின் வார்த்தையை நம்பி, குடும்பத்தோடு பெலிஸ்தர் தேசத்தை நோக்கிப் பயணமானாள். எவ்வளவு பெரிய நம்பிக்கை பாருங்கள் - தன் சொத்தையும் வீட்டையும் விட்டு, தேவனுடைய மனுஷனின் ஒரு வார்த்தையை மட்டும் பற்றிக்கொண்டு புறப்பட்டாள். ஏழு வருஷம் அந்நிய தேசத்தில் தங்கியிருந்தாள். கீழ்ப்படிதல் என்பது சிலநேரம் நமக்கு பரிச்சயமான இடத்தை விட்டு வெளியேறுவதாகவே இருக்கும்.
