2 சாமுவேல் 13:6தகப்பனிடம் பொய்
அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
2 Samuel 13:6
தகப்பனிடம் பொய்
அம்னோன் யோனதாபின் ஆலோசனையை உடனே செயல்படுத்தினான். நோயாளியாக நடித்து, தன் தகப்பனாகிய தாவீதிடமே தாமாரை அனுப்பும்படி கேட்டான். தன் தகப்பனின் அன்பையும் நம்பிக்கையையும் தன் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்திக்கொண்டான் என்பதைப் பாருங்கள். அன்பான ஒரு தகப்பன் தன் மகனின் வார்த்தையை சந்தேகிக்காமல் நம்பியது, இங்கே தவறாகப் பயன்படுத்தப்பட்டது.
