2 சாமுவேல் 16:1சீபாவின் அன்பளிப்பு
தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனைச் சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், வற்றலான நூறு திராட்சப்பழக்குலைகளும், வசந்தகாலத்துப் பலனான நூறு குலைகளும், ஒரு துருத்தி திராட்சரசமும் இருந்தது.
2 Samuel 16:1
சீபாவின் அன்பளிப்பு
தாவீது ஒலிவமலையை விட்டு சற்று தொலைவு நடந்தபோது, மேவிபோசேத்தின் வேலைக்காரன் சீபா இரண்டு கழுதைகள் நிறைய உணவுப் பொருள்களோடு வந்து காத்திருந்தான். அப்பங்களும், திராட்சைப்பழங்களும், திராட்சரசமும் - இவை பசியோடும், களைப்போடும் ஓடும் ராஜாவுக்கும் அவர் மனிதருக்கும் மிகவும் தேவையானவை. வாழ்வில் இப்படி நாம் நினைக்காதவரிடமிருந்தே உதவி வரும்போது, அது கர்த்தருடைய கரம் தானே என்று உணர்கிறோம்.
