2 சாமுவேல் 16:7இரத்தப்பிரியன் என்ற பேர்
சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
2 Samuel 16:7
இரத்தப்பிரியன் என்ற பேர்
சீமேயி தாவீதை 'இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே' என்று கடுமையாய் தூஷித்தான். இவை மிகக் கொடிய வார்த்தைகள் - ஒரு அரசனுக்கு முன்பாக யாரும் சொல்ல தைரியப்படாத வார்த்தைகள். தாவீதின் அதிகாரம் தளர்ந்த அந்த நேரத்தில், பழைய பகைவர்கள் தங்கள் மனதில் இருந்த வெறுப்பை வெளியே கொட்டிவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
