2 சாமுவேல் 18:2நானும் வருவேன்
பின்பு தாவீது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைச் செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைக் கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி: நானும் உங்களோடேகூடப் புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான்.
2 Samuel 18:2
நானும் வருவேன்
படையை மூன்று பிரிவாகப் பிரித்து யோவாப், அபிசாய், ஈத்தாய் என்ற மூவரிடம் தாவீது ஒப்படைத்தார். தானும் போருக்கு வர விரும்பினார் தாவீது - தன் மகனை எதிர்க்கும் போரிலும் அவர் முன்நின்று வழிநடத்த தயங்கவில்லை. ஒரு தலைவனுக்குரிய துணிவை இங்கே காண்கிறோம். ஆனால் ஜனங்கள் அதற்கு உடன்படவில்லை என்பதை அடுத்த வசனத்தில் காண்போம்.
