2 சாமுவேல் 2:18கலைமான் போன்ற ஆசகேல்
அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாயும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.
2 Samuel 2:18
கலைமான் போன்ற ஆசகேல்
யோவாபின் இளைய சகோதரன் ஆசகேல் காட்டு கலைமான்களைப் போல வேகமாக ஓடுகிறவனாக இருந்தார். இந்த வேகமான ஓட்டம் அவருடைய வலிமையாகவும் தோன்றியது, ஆனால் அதுவே அவரை ஆபத்திற்குள் தள்ளியது. இளமையின் துணிச்சலும் வேகமும் சில நேரங்களில் விவேகத்தை மறைத்து விடும். இந்த வேகமான ஓட்டம் என்ன முடிவுக்கு இழுத்துச் செல்கிறது என்பதை நாம் இனி காணப் போகிறோம்.
