2 சாமுவேல் 2:7திடப்படுத்திய கை
இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.
2 Samuel 2:7
திடப்படுத்திய கை
தாவீது யாபேசின் மனுஷரிடம் தங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராக இருக்கச் சொல்லச் சொன்னார். சவுல் இறந்துவிட்டதால் வாழ்க்கை முடிந்துவிட்டதாக அவர்கள் நினைக்க வேண்டாம் என்பதே அவரது கருத்து. தான் யூதாவின் மேல் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டதையும் அவர்களுக்குத் தெரிவித்தார். புதிய நாள் தொடங்கும் போது பயப்படாமல் மனதைத் திடப்படுத்திக் கொள்ளும்படி ஊக்கப்படுத்துவது ஒரு நல்ல தலைவனின் அடையாளம்.
