2 சாமுவேல் 20:5தாமதித்த அமாசா
அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பிக்கப் போய், தனக்குக் குறித்தகாலத்திலே வராமல் தாமதித்திருந்தான்.
2 Samuel 20:5
தாமதித்த அமாசா
அமாசா குறித்த மூன்று நாட்களுக்குள் வராமல் தாமதித்தார். ஏன் என்று வேதம் விளக்கவில்லை, ஆனால் அந்த தாமதமே அவரது வாழ்வை மாற்றும் நிகழ்வுகளுக்கு காரணமாகிறது. சிலசமயம் நம் தாமதம் நாம் அறியாத ஆபத்துக்களை நமக்கு அருகில் கொண்டுவரும். நேரத்தில் செய்யவேண்டிய காரியத்தை செய்வது ஞானம்.
