2 சாமுவேல் 22:20விசாலமான இடம்
என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.
2 Samuel 22:20
விசாலமான இடம்
நெருக்கடியான, ஒளிந்திருந்த குகைகள் நாட்களிலிருந்து தேவன் அவரை விசாலமான இடத்திற்குக் கொண்டு வந்தார். இது சவுலிடமிருந்து ஓடி ஓடி வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து, இப்போது இஸ்ரவேலின் அரசனாக அமைதியாக அரசாளும் நிலைக்கு வந்ததைக் குறிக்கிறது. தேவன் அவர் மீது பிரியமாய் இருந்தபடியால் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று அவர் அறிக்கை செய்கிறார். நெருக்கடியிலிருந்து விசாலத்திற்கு நடத்திச் செல்வது தேவனுடைய வழக்கமான கிருபை.
