2 சாமுவேல் 22:41பகைவரின் பிடரி
நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
2 Samuel 22:41
பகைவரின் பிடரி
யுத்தத்தில் எதிரி புறமுதுகு காட்டி ஓடுவதைத்தான் தாவீது இப்படிச் சொல்கிறார் - 'பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்'. தானே வலிமையால் வென்றதாக அவர் நினைக்கவில்லை, கர்த்தரே எதிரிகளை அவர் முன் திரும்பப்பண்ணினார் என்று அறிக்கிறார். போரின் வெற்றி முழுவதும் தேவனுடையது என்பதை அவர் மறக்கவில்லை. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றியிலும் யார் கை இருக்கிறது என்று நினைத்துப் பார்க்கலாம்.
