2 சாமுவேல் 23:16உயிரைப் பணயம் வைத்தது
அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:
2 Samuel 23:16
உயிரைப் பணயம் வைத்தது
தாவீதின் அந்த ஏக்கத்தை கேட்ட மூன்று வீரர்கள், பெலிஸ்தரின் படையின் நடுவே துணிந்து புகுந்து, அந்த கிணற்றுத் தண்ணீரை கொண்டு வந்தார்கள். அவர் அதைக் குடிக்க மனதில்லாமல் இருந்ததில் ஆச்சரியம் இல்லை, ஏனெனில் அது தண்ணீர் அல்ல, அவர்களின் உயிராகவே அவருக்குத் தோன்றியது. தலைவனுக்கான ஆழ்ந்த அன்பினால் இவர்கள் இப்படி துணிந்து செயல்பட்டார்கள். இப்படிப்பட்ட தியாக அன்பை நாமும் நம் நேசர்களிடம் காட்ட முடிந்தால் எத்தனை அழகாக இருக்கும்.
