2 சாமுவேல் 23:2நாவில் இருந்த வசனம்
கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
2 Samuel 23:2
நாவில் இருந்த வசனம்
தாவீது தன் சொந்த அறிவினால் இந்த வார்த்தைகளை உரைக்கவில்லை, கர்த்தருடைய ஆவியானவர் அவரைக் கொண்டு பேசினார் என்று அவரே சாட்சி சொல்கிறார். ஒரு பாட்டுக்காரனாக, ஒரு தீர்க்கதரிசியாக தேவன் தன்னை பயன்படுத்தினார் என்பதை அவர் நன்றியுடன் ஒப்புக்கொள்கிறார். வயதான காலத்திலும் தேவனுடைய ஆவியானவரின் ஸ்பரிசத்தை உணர்ந்தார் என்பது அழகான காட்சி. நம் வார்த்தைகளிலும் தேவனுடைய ஆவியானவர் வழிநடத்த வேண்டும் என்பதே நம் ஜெபமாக இருக்கட்டும்.
