2 சாமுவேல் 4:1கைகள் தளர்ந்த செய்தி
அப்னேர் எப்ரோனிலே செத்துப் போனதைச் சவுலின் குமாரன் கேட்டபோது, அவன் கைகள் திடனற்றுபோயிற்று; இஸ்ரவேலரெல்லாரும் கலங்கினார்கள்.
2 Samuel 4:1
கைகள் தளர்ந்த செய்தி
அப்னேர் இறந்த செய்தி எப்ரோனிலிருந்து வந்தபோது, இஸ்போசேத்துக்கு தன் ஆட்சியின் ஊண்றுகோல் அறுந்ததுபோல் இருந்தது. அவனுடைய படைத்தலைவனே இல்லாமல் போனால், சவுலின் வீட்டுக்கு இனி யார் நிலைத்து நிற்பார்கள்? அதனால்தான் அவன் கைகள் திடனற்றுப் போயின, இஸ்ரவேலர் எல்லாரும் கலங்கினார்கள். ஒரு ராஜ்யத்தின் பலம் ஒரே ஆளின்மேல் தங்கியிருந்தால் அது எவ்வளவு நிலையற்றது என்பதை இந்த ஒரு வரியே சொல்லிவிடுகிறது.
